தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'கரோனாவை வெல்ல மக்களின் அர்ப்பணிப்பு அவசியம்'

கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற மக்களிடம் அர்ப்பணிப்பு தேவை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

News image

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

Updated On :11 அக்டோபர் 2020, 10:32 am

DIN

கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற மக்களிடம் அர்ப்பணிப்பு தேவை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுடன் இணைய வாயிலாக பேசிய அவர், ''கரோனாவுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கையால் வெளிநாட்டு விருந்தினர்கள் மகாராஷ்டிரத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படவில்லை. மகாராஷ்டிரத்தில் 70 முதல் 80 சதவிகிதத்தினருக்கு கரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவுக்கு எதிரான பேரில் மருந்துகள் கண்டறியும் வரை முகக்கவசம் மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும். கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறாத வகையில் கடுமையான விதிமுறைகளையோ அல்லது மீறுபவர்களுக்கு அபராதமோ விதிக்கப்படாது. 

பெருந்தொற்றுக்கு எதிரான போரில் கரோனாவை வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம் என்று கூறினார். 

முகக்கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். சூழலைப் பொறுத்து தளர்வுகள் மீண்டும் தொடங்கப்படாது. மேலும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படாது'' என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.