மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில், இந்த ஆண்டு இடஒதுக்கீடு அளிக்க முடியுமா என பதிலளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.கிரி, வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜராகி, "நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காமல், இதற்காக ஒரு குழுவை அமைத்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது சரியல்ல. மேலும், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அளித்துள்ள ஆவணத்தின்படி, மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருப்பது தெளிவாகத் தெரிய வருகிறது. ஆகவே, இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என்றனர்.
மருத்துவர் டி.ஜி.பாபு சார்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் வாதிடுகையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழுவின் கூட்டம் செப்டம்பர் 22-ஆம் தேதி கூடியது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி எழுப்பிய கேள்வியின் போது, மத்திய சுகாதார அமைச்சர், "அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசு ஒதுக்கிய இடங்களில் மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றப்படும்' என்றார்.
ஆகவே, இந்தக் கல்வி ஆண்டிலேயே அந்த இடஒதுக்கீட்டை மாநிலத்திற்கு அளிக்க வேண்டும். "நீட்' தேர்வு முடிவுகளை மத்திய அரசு அக்டோபர் 16-இல் அறிவிக்க உள்ளது. எனவே, வழக்கில் தொடர்புடையவர்களின் உரிமைகளுக்கு பாதகம் இல்லாத வகையில், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு அமல்படுத்தி வரும் 27 சதவீத இடஒதுக்கீட்டையாவது மத்திய தொகுப்புக்கு மாநில அரசு ஒப்படைத்த இடங்களில் மத்திய அரசு கொடுக்கலாம். உயர்நீதின்றம் அமைத்த குழுவின் முடிவு வரும் வரை இது தற்காலிக ஏற்பாடாக இருக்கும்' என்றார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், "உயர்நீதிமன்றம் அமைத்திருந்த குழுவின் கூட்டம் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசு நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதை அகில இந்தியத் தொகுப்பு இடங்களுக்கு வழங்க முடியும். மாநிலத்திற்கு மாநிலம் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் முறை மாறுபடுவதால் இதை அமல்படுத்துவது மத்திய அரசுக்கு சிரமமாக இருக்கும். உதாரணமாக, 50 சதவீத இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தடையாக உள்ளது.
அதேவேளையில், தமிழகத்தில் 1993-ஆம் ஆண்டுச் சட்டப்படி 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. ஆகவே, இதுகுறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.
தேசிய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான சர்மா, "இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கவில்லை' என்றார். அதிமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன்,"இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. இதனால், மத்திய அரசு இந்த வாதங்களை வலியுறுத்த முடியாது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால், இந்த ஆண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியுமா என்பது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பல்பீர் சிங், சர்மா ஆகியோரிடம் வாய்மொழியாக கேட்டுக் கொண்டது. மேலும், வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு
வானதி சீனிவாசன் குணமடைய மேலும் சில நாள்களாகும்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


