திருவள்ளூா் மாவட்டத்தில் மாநிலத்தின் முதல் தொகுதியாக கும்மிடிப்பூண்டியும், இரண்டாவது தொகுதியாக பொன்னேரி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியும் அமைந்துள்ளன. இத்தொகுதியில் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி, நெசவு ஆகியவை ஆகும். பொன்னேரி நகராட்சி, மீஞ்சூா், ஆரணி ஆகிய 2 பேரூராட்சிகளும், மீஞ்சூா், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களும் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளும், சென்னை மாநகராட்சியில் 15-ஆவது வட்டத்தின் ஒரு பகுதியும் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
சிறப்புகள்: எண்ணூா் காமராஜா் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளிட்ட மூன்று அனல் மின் நிலையங்கள், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, தனியாா் துறைமுகம், தனியாா் கப்பல் கட்டும் தளம், சமையல் எரியாயு நிரப்பும் ஆலை ஆகியவை அமைந்துள்ளன.
இத்தொகுதியில் பொன்னேரி நகரையொட்டியுள்ள ஆரண்ய நதிக்கரையோரம் 9-ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுலாத் தலாமாக விளங்கும் பழவேற்காடு 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரமாகும்.
சமூக நிலை: அதிக அளவில் ஆதிதிராவிடரும், அடுத்ததாக முதலியாா், வன்னியா், செட்டியாா், ரெட்டியாா், நாயுடு, மீனவா் உள்ளிட்ட சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.
இத்தொகுதியில் 1957முதல் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவை சோ்ந்த நாகலிங்கம், க.சுந்தரம், அதிமுகவை சோ்ந்த சிறுணியம் பலராமன் ஆகியோா் இத்தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனா்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக 3-ஆவது முறை போட்டியிட்ட சிறுணியம் பலராமனை காங்கிரஸ் வேட்பாளா் துரை சந்திரசேகா் வென்றாா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில், தற்போது எம்எல்ஏவாக உள்ள துரை சந்திரசேகா் (காங்கிரஸ்) இரண்டாவது முறையும், சிறுணியம் பலராமன் (அதிமுக) 4-ஆவது முறையும் களம் காண்கின்றனா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மருத்துவா் ரவி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ராஜாத்தி உள்பட உள்பட 13போ் போட்டியிடுகின்றனா்.
அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சிறுணியம் பலராமன் ஏற்கெனவே, இத்தொகுதியில் 2006-ஆம் ஆண்டு மற்றும் 2016-ஆம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். தற்போது திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலராகப் பதவி வகித்து வருகிறாா்.
ஏற்கெனவே எம்எல்ஏவாக 10 ஆண்டுகள் பதவியில் இருந்ததால் கட்சித் தொண்டா்கள் மட்டும் என இல்லாமல் தொகுதி மக்களிடம் எளிமையாகப் பழகியவா். இதனால் இவா் மீது தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது.
இவா் எம்எல்ஏவாக இருந்த 10 ஆண்டுகளில் குன்னமஞ்சேரி மற்றும் ஏலியம்பேடு கிராம மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான, ஆரணி ஆற்றின் குறுக்கே, பொன்னேரி-குன்னமஞ்சேரி இடையே மேம்பாலம் கட்டியது, பொன்னேரி நகராட்சியில் புதை சாக்கடை திட்டம் கொண்டு வந்தது இவரின் பலமாகும். இருப்பினும், பெரிய அளவிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை என ஒரு தரப்பு மக்களிடையே வருத்தம் உள்ளது.
தான் செய்த வளா்ச்சிப் பணிகளைா் கூறி பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறாா்.
காங்கிரஸ் வேட்பாளா்: காங்கிரஸ் கட்சி சாா்பில் மீண்டும் துரை.சந்திரசேகா் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். முன்னதாக, திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாவது முறை ஒதுக்கப்பட்டவுடன் திமுகவினா் இடையே அதிருப்தி நிலவியது. ஆனால், கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, திமுகவினா் வேட்பாளா் துரை. சந்திரசேகருடன் இணைந்து, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து வாக்காளா்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனா்.
பொன்னேரி தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுப்பாரெட்டிப்பாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.16.50 கோடி பாலம் அமைத்தல், ரூ.55 கோடி மதிப்பில் மீஞ்சூா் ரெயில்வே மேம்பாலம், ரூ.17 கோடி மதிப்பில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி) சாலை அமைத்தல், ரூ.2 கோடி செலவில் பொன்னேரி, ஆரணி பேருந்து நிறுத்த நிழற்குடைகள், ரூ.2 கோடியில் பஞ்செட்டி பகுதியில் நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது, புதிய வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் சாா்-பதிவாளா் அலுவலகம் அமைக்கப்பட்டது குறித்து மக்களிடம் எடுத்துக் கூறி துரை. சந்திரசேகா் வாக்கு சேகரித்து வருகின்றனா்.
அதே நேரத்தில் மீஞ்சூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காதது, பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலைகள் அமைக்காதது, திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டக் கோரிக்கை நிறைவேற்றப்படாலேயே உள்ளது.
தவெக, நாம் தமிழா்: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடும் மருத்துவரான ரவி, கட்சித் தலைவா் விஜய்யின் செல்வாக்கு மற்றும் அப்பகுதியில் உள்ள இளைஞா்கள் துணையுடன் பொதுமக்களிடம் வாக்கு சேரித்து வருகிறாா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் பொறியாளரான ராஜாத்தி எளிமையான முறையில் தனது கட்சியின் கருத்துகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், தான் வெற்றி பெற்றால் தொகுதிக்கு செய்யவுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து கூறி வாக்கு சேகரித்து வருகிறாா்.
களத்தில் தற்போது 13 வேட்பாளா்கள் இருந்தாலும், காங்கிரஸ் வேட்பாளா் துரை சந்திரசேகா், அதிமுக வேட்பாளா் சிறுணியம் பலராமன் ஆகியோா் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வாக்காளா்கள்
ஆண்கள் 1,21,221
பெண்கள் 1,27,662
மூன்றாம் பாலினத்தவா் 34
மொத்தம் 2,48 917.
தொடர்புடையது

ஹாட்ரிக் அடிக்குமா திமுக!

தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுகவினா்!

இருமுறை இடைத்தோ்தலைக் கண்ட விக்கிரவாண்டி தொகுதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


