அசாம் மாநிலத்தில் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகளுக்கு மாட்டிறைச்சி வழங்கக்கூடாது எனக் கூறி பாஜகவினர் போராட்டம் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அசாம் மாநிலம் கெளஹாத்தியில் மிருகக்காட்சி சாலை உள்ளது. இதில் மான்கள், புலிகள், குரங்குகள் உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள புலிகளுக்கு உணவாக மாட்டிறைச்சி வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் அசாம் மாநில பாஜக முன்னணி தலைவராக உள்ள சத்ய ரஞ்சன் போரா தனது ஆதரவாளர்களுடன் மிருகக்காட்சி சாலைக்கு இறைச்சி ஏற்றி வரும் வாகனத்தை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
“மாட்டை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இது மிருகக்காட்சிசாலையில் உள்ள புலிகளுக்கு மாமிச உணவில் பிரதானமானதாக இருக்கிறது. ஏன் மாட்டிறைச்சியைப் பரிமாற வேண்டும்? ஏன் மற்ற இறைச்சியை புலிகள் சாப்பிட கொடுக்கக்கூடாது?" என அவர்கள் தெரிவித்தனர்.
பசுக்களுக்கு பதிலாக சாம்பார் மானின் இறைச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என வாக்குவாதமிட்ட பாஜகவினர் பசு பாதுகாப்பு கோஷங்களை எழுப்பினர்.
சாம்பார் மான் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் "பாதுகாக்கப்பட வேண்டியவை" என்று பட்டியலிடப்பட்டுள்ளதால் அவற்றை புலிகளுக்கு இறைச்சியாக வழங்க முடியாது எனத் தெரிவித்த மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் விலங்குகளுக்கு அவற்றின் ஊட்டச்சத்துக்கு மாட்டிறைச்சி அவசியம் என விளக்கமளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


