தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரை காரில் தூக்கிச் சென்ற அவலம்

தில்லியில், சாலை விதிகளை மீறிய காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரையே, கார் மீது ஏற்றி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரை காரில் தூக்கிச் சென்ற அவலம் - விடிய
Updated On :15 அக்டோபர் 2020, 7:29 am

ANI

தில்லியில், சாலை விதிகளை மீறிய காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரையே, கார் மீது ஏற்றி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விதிகளை மீறியபடி வேகமாக வந்து கொண்டிருந்த காரை, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால், அவரைப் பார்த்தும் காரை நிறுத்தாத வாகன ஓட்டி, காரால் போக்குவரத்துக் காவலரை இடித்ததால் காரின் முன்பகுதியில் போக்குவரத்துக் காவலர் விழுந்துவிட, அப்படியே அவரை தூக்கியவாறு கார் சில மீட்டர்கள் தூரம் வரைச் சென்றது.

பிறகு கார் பிரேக் போட்டபோது, போக்குவரத்துக் காவலர் காரின் பக்கவாட்டில் விழுந்து உயிர் தப்பினார். இவ்வளவையும் தாண்டியும் கூட, அந்த கார் எங்கும் நிற்காமல் வேகமெடுத்துச் சென்றது. அதே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அந்த காரை நிறுத்த முயன்றும், அது நிற்காமல் சென்றது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தில்லி காவல்துறை, கார் ஓட்டுநரை கைது செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.