புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 73,70,469 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து 64,53,780 போ் மீண்டுள்ளனா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 63,371 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 73,70,469-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 81,514 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 64,53,780-ஆக அதிகரித்தது. அதாவது, 87.56 சதவீதம் போ் குணமடைந்தனா். நாடு முழுவதும் 8,04,528 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 10.92 சதவீதமாகும்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு மேலும் 895 போ் பலியாகினா். இதனால், நாடு முழுவதும் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,12,161-ஆக அதிகரித்தது. அதாவது 1.52 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 15-ஆம் தேதி வரை 9,22,54,927 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 10,28,622 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


