சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

'ஓணம் கொண்டாட்டத்தினால் கேரளத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்கானது'

ஓணம் கொண்டாட்டத்தினால் கேரளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்கானது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:35 am

ஓணம் கொண்டாட்டத்தினால் கேரளத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்கானது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தின் வாயிலான ஞாயிறு சம்வத்-6வது நிகழ்ச்சியில் தம்முடன் உரையாடிவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதில் அளித்தார். நவராத்திரிக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் அப்போது அவர் தெரிவித்துக்கொண்டார். பிரதமரின் பொது இயக்கத்துக்கு கவுரவம் அளிக்கும்படி தமது சமூக ஊடகப் பின்தொடர்பாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். கொவைட்டுக்கு ஏற்ற நடத்தைகளை மதரீதியாக பின்பற்ற மற்றவர்களுக்கான தூதுவர்களாக மாறும்படியும் அவர்களை கேட்டுக்கொண்டார். 

பாரம்பர்யமான வழியில் தங்கள் நேசத்துக்கு உரியவர்களுடன் வீட்டிலேயே ஒவ்வொருவரும் விழாவைக் கொண்டாட வேண்டும் என்ற நமது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார். “இந்த விழா காலத்தில், கொண்டாட்டத்தை விடவும், தொண்டு செய்வது முன்னுரிமை பெற வேண்டும்.  கொவைட்-19-ன் நெஞ்சை உருக்கும் தாக்கம் காரணமாக நமக்காக உலகம் முழுவதும் லட்சகணக்கான கொரோனா போராளிகள் போராடி வருகின்றனர். எனவே, எனது சொந்த கொண்டாட்டத்தைக் கூட குறைத்துக் கொண்டுள்ளேன்,” என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.

அண்மையில் கேரளத்தில் கொவைட்-19 பாதிப்புகள் திடீரென அதிகரித்தது குறித்த கருத்துகளையும் ஹர்ஷ் வர்தன் பகிர்ந்து கொண்டார். ஜனவரி 30-ஆம் தேதி மற்றும் மே -3ஆம் தேதி இடையே கேரளத்தில் 499 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். அண்மையில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது மாநிலம் முழுவதும் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கான மாநிலத்துக்கு வெளியே, மாநிலத்துக்கு உள்ளே போக்குவரத்துகளை அதிகரித்ததுடன் பல்வேறு சேவைகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்த அலட்சியத்தின் விலையை இப்போது கேரளா கொடுத்திருப்பதாகவும் ஹர்ஷ் வர்தன் வருத்தம் தெரிவித்தார். இதனால் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொவைட் 19 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது என்றும் அவர் கூறினார். “மாநிலத்தில் ஓணம் பண்டிகைகொண்டாட்டத்தின் காரணமாக கேரளத்தில் தொற்றின் புள்ளிவிவரம் மாறி விட்டது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்கானது.” என்று கூறினார். விழா காலத்தில் திட்டமிடுவதில் அலட்சியமாக இருந்ததால் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து மாநில அரசுகளும் பணியாற்ற வேண்டும் என்றும் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.