மலப்புரத்தில் கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி
மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா பாதிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.


மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா பாதிப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்குச் சென்றுள்ளார். இன்று காலை தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 11.30 மணிக்கு கோழிக்கோடு வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் சென்ற அவர், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக மலப்புரத்தில் கடந்த 3 தினங்களாக ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், காவலப்பராவில் கடந்த ஆண்டு நிலச்சரிவில் வீட்டுடன் பெற்றோரை இழந்த சகோதரிகளுக்கு புதிய வவீட்டிற்கான சாவியினை அளித்தார் ராகுல் காந்தி.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், புதன்கிழமை மனந்தவாடி அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார். பின்னர் கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...