சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கணவர் சிறைக்குச் சென்றபோது, மனைவி முதல்வரானார்: நிதிஷ் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பெயர்களைக் குறிப்பிடாமல் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியை தாக்கிப் பேசினார்.

News image

கணவர் சிறைக்குச் சென்றபோது, மனைவி முதல்வரானார்: நிதிஷ் குமார்

Updated On :19 அக்டோபர் 2020, 12:43 pm


ஔரங்காபாத்: பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பெயர்களைக் குறிப்பிடாமல் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவியை தாக்கிப் பேசினார்.

எப்போது கணவர் சிறைக்குச் சென்றாரோ அப்போது அவரது மனைவி மாநிலத்தின் முதல்வரானார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவியின் பெயர்களைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குறிப்பிட்டு நிதிஷ் குமார் பேசியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசுகையில், முந்தைய ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அனைவருக்குமே தெரியும், கணவன் - மனைவியின் ஆட்சியின் போது என்ன நடந்தது என்று. அனைத்து வகையான குற்றங்களும் நடந்தன. அதேவேளையில் மக்களுக்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது அனைத்துத் துறைகளையும் முன்னேற்றினோம் என்று ஔரங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.