வயநாடு கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி
மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.


மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி, இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்தத் தொகுதியான வயநாடுக்குச் சென்றுள்ளார். திங்கள்கிழமை காலை தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்ற அவர் அன்று பிற்பகல் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்றார். வயநாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த தடுப்புப் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நாளை மனந்தவாடி அரசு மருத்துவமனையை பார்வையிடும் ராகுல் காந்தி, நாளை மாலை அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...