சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் உசேனுக்கு கரோனா

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2020, 7:32 am

பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பா.ஜ.க. தேசிய செய்தித்தொடர்பாளர் சையத் ஷாஹனாவாஸ் உசேன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். கரோனா தொற்று கண்டறியப்பட்ட நபர்களுடன் இருந்ததால் தாமும் கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், இதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவரின் அறிவுரையின்படி மருத்துவமனையில்  தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நலமுடன் இருப்பதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பிரசாரக்காரர்களில் சையத் ஷாஹனாவாஸ் உசேனும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.