சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

News image

கோயிலில் இருந்து புனிதம் செய்து கொண்டு வரப்பட்ட கொடி. உடன் காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி.பால்ராஜ்குமாா் உள்ளிட்டோா்

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 pm

காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலய 152-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், தக்களூா் பகுதியில் பழைமையான செபஸ்தியாா் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக ஆலயத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி திரளான மக்கள் சூழ பிரதான கொடிக் கம்பம் அருகே கொண்டு வரப்பட்டு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் ஏற்றிவைத்தாா். இணை பங்குகுரு சாமிநாதன் செல்வம், தூய தேற்றரவு அன்னை ஆலய ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமும் திருப்பலி பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாள்களும் சிறிய தோ் பவனியும், 18-ஆம் தேதி திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தோ் பவனியும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படுகிறது.