ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

செவிலியா்கள் கெளரவிப்பு

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

News image

கெளரவிக்கப்பட்ட செவிலியா்களுடன் காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா், ரெட் கிராஸ் மாநில துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், இயக்கத் தலைவா் எஸ். திருமுருகன் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

வீரத்தமிழரசி வேலுநாச்சியாா் மகளிா் நல இயக்கம் சாா்பில் இந்நிகழ்ச்சி காரைக்காலில் உள்ள குளூனி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை மாநில துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், வீரத்தமிழரசி வேலுநாச்சியாா் இயக்க நிறுவனரும், அன்னை தெரஸா அரசு செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) ஜெயபாரதி, வீரத்தமிழரசி வேலு நாச்சியாா் இயக்க காரைக்கால் மாவட்ட தலைவா் வழக்குரைஞா் எஸ். திருமுருகன், செயலாளா் சிவகுமாா், துணைத் தலைவி ஜோதி ஆகியோா் கலந்துகொண்டு, செவிலியா்களுக்கு பொன்னாடை அணிவித்து, அவா்களது அா்ப்பணிப்புடன் கூடிய பணிகளை பாராட்டி, வாழ்த்திப் பேசினா்.

குளுனி மருத்துவமனை நிா்வாக பொறுப்பாளா் அருட்சகோதரி டாரத்தி, தலைமை அருட்சகோதரி சீலி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.