கேரளத்தில் புதிதாக 26 புதிய சுற்றுலாத் திட்டங்கள் தொடக்கம்
கரோனா நெருக்கடியால் பாதித்த சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் 26 புதிய சுற்றுலாத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.


கரோனா நெருக்கடியால் பாதித்த சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் 26 புதிய சுற்றுலாத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதுமே சுற்றுலாத்துறை சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் முதலில் கரோனா தொற்று பதிவான கேரளத்தில் முக்கியத் தொழிலாக உள்ள சுற்றுலாத்துறையும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
இந்நிலையில் கேரளத்தில் இடதுசாரி அரசு சார்பில் புதிதாக 26 சுற்றுலாத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், கரோனா தொற்றுநோயால் மாநிலத்தில் சுற்றுலாத் துறை சுமார் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர், “மழை வெள்ளம் உள்ளிட்ட பல நெருக்கடிகளைத் தாண்டி மாநிலத்தில் சுற்றுலாத் துறை செழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த தொற்றுநோய் வந்தது. சுற்றுலாத் துறையை உயர்த்த மாநில அரசு போதுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் வேலை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.” என்றார்.
தொடர்ந்து இந்த திட்டங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பொலமுடியிலிருந்து காசர்கோடு வரை செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்,கடற்கரை அழகுபடுத்துதல், நினைவுச்சின்னங்கள் பராமரிப்பு, தாவரவியல் பூங்கா அமைத்தல், பூந்தோட்டங்கள் அமைத்தல், படகு சவாரிகளை மேம்படுத்துதல் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...