உ.பி. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்: பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் மக்களிடையே அச்சம் நிலவுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)
பிரியங்கா காந்தி(கோப்புப்படம்)

உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் மக்களிடையே அச்சம் நிலவுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆளும் பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை குற்றஞ்சாட்டி வருகிறார். 

இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று காலை பாக்பாத்தில் ஒரு இரும்பு வணிகர் கடத்தப்பட்டுள்ளார். உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. வர்த்தகர்கள் பாதுகாப்பாக இல்லை. குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், ஆட்சியாளர்கள் தேர்தல் கூட்டங்களில் வெறும் பொய்யுரைகளை உரைக்கின்றனர் என்றும் உபியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com