பிகார் பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளரானார் ஸ்ரேயாசி சிங்
காமல்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் ஸ்ரேயாசி சிங்கை நடைபெற உள்ள பிகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.


காமல்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் ஸ்ரேயாசி சிங்கை நடைபெற உள்ள பிகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
பிகாரில் 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய சிங்கின் மகளும், 2010 காமல்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரருமான ஸ்ரேயாசி சிங் இந்த மாதத் தொடக்கத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் நடைபெற உள்ள பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஜமூய் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரேயாசி சிங் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவராவர். இந்திய அரசின் அர்ஜுனா விருதையும் அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...