கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் நவம்பர் 1ஆம் தேதி முதல் புணேவில் பொதுப்பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு நிலைமைகளுக்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொதுப் பூங்காக்கள் திறக்கப்படும் என புணே மாநகர மேயர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
நகரத்தின் நிலைமையை மத்திய அரசின் குழு ஆய்வு செய்துள்ளதாகவும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்த அவர், உள்ளூர்வாசிகள் பூங்காக்களைப் பார்வையிடும்போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
விரைவில் இதுகுறித்த எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என முரளிதர் மோஹல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


