உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 அக்டோபர் 2020, 4:52 pm


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 14 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை:

மும்பையில் புதிதாக 1,354 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,54,242 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,24,217 பேர் குணமடைந்துள்ளனர், 10,153 பேர் பலியாகியுள்ளனர். 18,984 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

தாராவியில் புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,522 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், 3,066 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, 148 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.