நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள “காட்டாளன்” திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன்.
தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “வேட்டையன்” மற்றும் தனுஷின் ”ராயன்” ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் நடிகர் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடித்துள்ள “காட்டாளன்” எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகை துஷாரா விஜயன் அறிமுகமாகின்றார்.
யானை தந்தம் கடத்தல் குறித்த ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள “காட்டாளன்” படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் சனிக்கிழமை (ஏப். 11) அன்று அறிவித்துள்ளது.
Summary
regarding the release of the film Kaattaalan, starring actors Antony Varghese and Dushara Vijayan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது துஷாரா, அதிதி நடித்துள்ள எக்ஸாம் இணையத் தொடர்!

கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




