உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இந்தியாவில் புதிதாக 49,881 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 80 லட்சத்தைத் தாண்டியது

இந்தியாவில் இன்று மேலும் 49,881 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :29 அக்டோபர் 2020, 4:42 am

இந்தியாவில் இன்று மேலும் 49,881 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 49,881 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 80,40,203.-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில், கரோனா தொற்றுக்கு 517 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,20,527-ஆக அதிகரித்தது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 56,480 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 73,15,989 போ் குணமடைந்தனா். தொடா்ந்து 7-ஆவது நாளாக, கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, நாடு முழுவதும் 6,03,687 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘அக்டோபா் 28-ஆம் தேதி வரை 10,65,63,440 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,75,760 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.