963 ரயில் நிலையங்கள் சோலார் மயம்: 2030-க்குள் தன்னிறைவு அடைய திட்டம்

நாட்டிலுள்ள 963 ரயில்நிலையங்கள் இதுவரை சோலார்மயமாக்கப்பட்டுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்நிலையங்கள்
ரயில்நிலையங்கள்


புதுதில்லி: நாட்டிலுள்ள 963 ரயில்நிலையங்கள் இதுவரை சோலார்மயமாக்கப்பட்டுள்ளன. 2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் சூழல் மாசு ஏற்படுத்தாத மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்க சூரிய ஒளி மின்சாரத்தை (சோலார் பவர் பிளான்ட்) உற்பத்தி செய்யும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

2030-ஆம் ஆண்டுக்குள் கார்பன் மாசு சிறிதும் இல்லாத துறையாக ரயில்வேயை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வரும் பத்தாண்டுகளில் 3,100 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பயன்பாடு 2,000 கோடி யூனிட்களாகும்.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக  963 ரயில்நிலையங்களின் கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வாராணசி, புது தில்லி, பழைய தில்லி, ஜெய்ப்பூர், செகந்தராபாத், கொல்கத்தா, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹௌரா உள்ளிட்ட ரயில்நிலையங்கள் சோலார் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் 550 ரயில்நிலையங்களில்198 மெகா வாட் திறனுள்ள சூரியஒளி மின்தகடுகளை நிறுவ பணிகள் நடந்து வருகின்றன. 2023-க்குள் இந்திய ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும்.

இந்திய ரயில்வே நிறுவனத்துக்கு சொந்தமாக 51,000 ஹெக்டேர் காலியிடம் உள்ளது. இந்த இடங்களில் சூரிய ஒளி மின்நிலையங்களை தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிறுவி 20 கிகா வாட் மின்சாரத்தை 2030}க்குள் (ஒரு கிகா வாட்: 10  லட்சம் கிலோ வாட்) உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 கிகா வாட் சோலார் மின்நிலையங்களை அமைக்க, பொதுத்துறை நிறுவனமான  ரயில்வே ஆற்றல் மேலாண்மை நிறுவனம் (ஆர்இஎம்சிஎல்) ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com