விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடன் பெற்று ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்குங்கள்: சத்தீஸ்கர் முதல்வர்

மத்திய அரசு கடன் பெற்றோ அல்லது வேறு வழிகளிலோ நிதியை ஏற்பாடு செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்

News image

சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல்

Updated On :4 செப்டம்பர் 2020, 2:43 pm

மத்திய அரசு கடன் பெற்றோ அல்லது வேறு வழிகளிலோ நிதியை ஏற்பாடு செய்து மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை தாமதமின்றி வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வழியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மத்திய நிதியமைச்சருக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் எழுதிய கடிதத்தில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி இழப்பீடாக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு ரூ.2 ஆயிரத்து 828 கோடியை  வழங்கக் கேட்டுக் கொண்டார்.

மேலும் அந்தக் கடிதத்தில், “அரசியலமைப்பு விதிகளின்படி, ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு மத்திய அரசே பொறுப்பு. மாநில அரசுகள் கடன் வாங்கினால், நிதிச் சுமை மாநிலங்களின் மீது விழும். ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு கடன் பெறுவதும், அதன் மூலம்  கடனை திருப்பிச் செலுத்துவதும் ஒரு சிக்கலான செயல்முறையாக இருக்கும்.” என்றார்.

”எனவே, மாநிலங்களுக்கு பதிலாக ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக கடன் அல்லது பிற வளங்கள் மூலமாக இந்த தொகையை மத்திய அரசு ஏற்பாடு செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங் வேண்டும்.” என பாகேல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசின் அறிவிப்புக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி, தில்லி ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.