அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜம்மு காஷ்மீர்: சி.ஆர்.பி.எப் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) உதவி துணை ஆய்வாளர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

News image
கோப்புப்படம்
Updated On :2 செப்டம்பர் 2020, 10:31 am

DIN

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) உதவி துணை ஆய்வாளர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  

ஜம்மு-காஷ்மீரின் சிஆர்பிஎப் 33வது பட்டாலியனைச் சேர்ந்த அமிர்த் பரத்வாஜ் (52) நேற்று இரவு பணி முடித்து தனது அறைக்குச் சென்ற அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. பதேர்வா காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. 

கரோனா பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசாமின் பார்லிபூர் கிராமத்தில் வசிக்கும் பரத்வாஜின் சடலத்தில் நான்கு புல்லட் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.