ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம்: மெட்ரோ ரயில் சேவைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

​செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

News image
கோப்பு படம்
Updated On :2 செப்டம்பர் 2020, 3:07 pm

DIN


செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இணையவழியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, செப்டம்பர் 12 முதல் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றார். 

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர், 

"செப்டம்பர் 7-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். மெட்ரோ சேவை தொடங்கியதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு முகக் கவசம் விற்பனை செய்யப்படும்." என்றார்.

பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் நிற்காது என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். 

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் இறுதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.