நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தோர் விகிதம் 53% உயர்வு

நாட்டில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தோர் விகிதம் 53% உயர்வு
Updated On :4 செப்டம்பர் 2020, 1:06 pm

DIN

நாட்டில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 53 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தரவுகளின்படி இந்தியாவில் 2014 ஆண்டிலிருந்து மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டில் மாரடைப்பால் 18 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்த நிலையில் 2019 ஆண்டில் 28 ஆயிரத்து 5 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயதினரிடையும் மாரடைப்பால் உயிரிழக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 2016ஆம் ஆண்டில் 1940 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிகை 2019ஆம் ஆண்டில் அதிகரித்து 2381ஆக உள்ளது.

அதேபோல் மாரடைப்பால் உயிரிழக்கும் 30 முதல் 45 வயதினர் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில்  6 ஆயிரத்து 646-ல் இருந்து 2019ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மாரடைப்பால் 2014 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 309 பேரும், 2015ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 820 பேரும், 2016 ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 914 பேரும், 2017ஆம் ஆண்டில் 23 ஆயிரத்து 246 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் 25 ஆயிரத்து 764 பேரும், 2019ஆம் ஆண்டில் 28 ஆயிரத்து 5 பேரும் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.