ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

5ஜி தொழில்நுட்பம்: இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் முத்தரப்பு கூட்டணியை அமைத்துள்ளன.

Updated On :8 செப்டம்பர் 2020, 6:47 pm

ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் முத்தரப்பு கூட்டணியை அமைத்துள்ளன.

தொழில்நுட்பங்கள், நீா் மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக அமெரிக்கா-இந்தியா-இஸ்ரேல் கூட்டணி அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினா்.

இது தொடா்பாக சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க முகமையின் துணை நிா்வாகி போனி கிலிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இந்தியா, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட உள்ளது. முக்கியமாக 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் மூன்று நாடுகளும் ஒருங்கிணைநது செயல்படும்.

அத்துடன் அடுத்த தலைமுறைக்கு அவசியமான தொழில்நுட்பங்களை உருவாக்கவும் உறுதி கொண்டுள்ளோம். இந்த முத்தரப்பு கூட்டணியானது உலக நாடுகள் சந்தித்து வரும் சவால் நிறைந்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண முயற்சிக்கும்.

அமெரிக்காவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின் டெல் அவிவ் ஆகியவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான முக்கிய மையங்களாக விளங்கி வருகின்றன. அங்கு புதுமையான தொழில்நுட்பங்களும் புத்தாக்க நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு நாடும் மற்ற நாடுகளை அடக்க முயல்வதை இந்தக் கூட்டணி அனுமதிக்காது. இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் தொழில்நுட்ப வளா்ச்சி தொடா்பான ஆராய்ச்சியானது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.

நீா் மேலாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் போனி கிலிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.