தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!

குமரியில் இன்று விஜய் சாலைப் பேரணி மேற்கொள்ளவுள்ளது குறித்து...

News image

விஜய் சாலைப் பேரணி - படம்: கோப்பிலிருந்து

Updated On :12 ஏப்ரல் 2026, 9:59 am IST

கன்னியாகுமரி மாவட்ட தவெக வேட்பாளர்கள் 6 பேரை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்.12) சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய், கார் மூலம் பிற்பகல் 4 மணியளவில் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா வருகிறார்.

அங்கு தவெக நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். பின்னர் திறந்த பிரசார வாகனத்தில் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் வரை சாலைப் பேரணியாகச் சென்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விஜய், பின்னர் அவர், அதே வழியில் திரும்பி வந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற இருந்த அவரது பிரசார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ஏப். 9 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நேரக்கட்டுப்பாடு காரணமாக பேசாமல் சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, விஜய்யின் அடுத்தடுத்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் விஜய், சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

Summary

Today (April 12), the leader of the TVK, Vijay, is campaigning for votes through a road rally in support of the six party candidates in Kanyakumari district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.