திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டது குறித்து..

News image

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவராக பொறுப்பேற்ற கருப்பையா. - டிஐபிஆர்

Updated On :10 மே 2026, 4:21 pm IST

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டார்.

சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கருப்பையா

பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கருப்பையா - டிஐபிஆர்

முன்னதாக பெரியார் திடலில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், ஆளுநர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தினார்.

பின்னர் வந்தே மாதரம் பாடலுடன் சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பு விழா தொடங்கியது. தவெக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், பேரவையின் தற்காலிகத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.

இவர்களுக்கு பேரவையின் தற்காலிகத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

Summary

Karuppiah Sworn In as Interim Assembly Speaker

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.