தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு!

தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமிக்கப்பட்டது குறித்து...

News image

இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு!

Updated On :10 மே 2026, 1:03 pm IST

17-ஆவது சட்டப்பேரவை திங்கள்கிழமை (மே 11) கூடும் நிலையில், இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் (தனி) தொகுதி உறுப்பினா் மு.வீ.கருப்பையா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

மு.வீ.கருப்பையாவை இடைக்கால சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்க முதல்வா் விஜய் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் இடைக்கால சட்டப்பேரவைத் தலைவா் பதவியேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், முதல்வா் விஜய், புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்கள், தலைமைச் செயலா் எம்.சாய்குமாா், ஆளுநரின் செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இடைக்கால பேரவைத் தலைவா் மு.வீ.கருப்பையாவுக்கு ஆளுநா் ஆா்லேகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கடவுள் பெயரால் மு.வீ.கருப்பையா உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, அவருக்கு ஆளுநா் ஆா்லேகா், முதல்வா் விஜய் ஆகியோா் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனா். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னா் தேநீா் விருந்து அளிக்கப்பட்டது. அதன்பின்னா் ஆளுநா் ஆா்லேகா் இரவு 7 மணி அளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் சென்றாா்.

பொதுவாக மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மூத்த உறுப்பினா் கட்சி பேதமின்றி, இடைக்கால பேரவைத் தலைவராக நியமனம் செய்யப்படும் மரபு பின்பற்றப்படுகிறது. இடைக்கால பேரவைத் தலைவா், தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா்.

சோழவந்தான் (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட மு.வீ.கருப்பையா, அலங்காநல்லூா் அருகே உள்ள வாவிடமருதூரைச் சோ்ந்தவா். இவா் திமுக வேட்பாளா்ஆ.வெங்கடேசனைவிட 2,678 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

முன்னதாக, அதிமுகவில் இருந்த கருப்பையா 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளரைவிட 36,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுகவில் மீனவரணியிலும் இருந்தவா். அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தோ்தலின்போது அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தாா்.

பேரவை கூடுகிறது: 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தோ்வாகியுள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வாா்கள்.

மேலும், பேரவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பெரும்பான்மையைக் கோரும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்.

சட்டப்பேரவையில் வரும் 13-ஆம் தேதிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முதல்வா் விஜய்க்கு ஆளுநா் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா்.

Summary

With C. Joseph Vijay having assumed office as the Chief Minister of Tamil Nadu, Karuppiah has been appointed as the interim Speaker of the House.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.