தவெக தலைவர் விஜய் பதவியேற்பில் சிக்கல் நீடிப்பதாக தவெக நிர்வாகி இசக்கியப்பன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான 118 இல்லாததால், தவெக ஆட்சியமைப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனிடையே, முதல்வராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் தவெக தொண்டர் அணி இணைச் செயலாளர் இசக்கியப்பன் (47) மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்கக்கோரி, இசக்கியப்பன் தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, இசக்கியப்பன் உடலில் 30 சதவிகித தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், இசக்கியப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
TVK executive Isakkiyappan attempted self-immolation today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டுக்குள் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் தவெக நிர்வாகி மீது வழக்கு

பெண் பாலியல் வன்கொடுமை: தவெக நிர்வாகிகளைக் கைதுசெய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

ஜேசிபி ஆப்ரேட்டரை தாக்கிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல்: தவெக நிா்வாகி நீக்கம்
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



