ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை மீண்டும் சந்திக்கவிருப்பது பற்றி...

News image

ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு - ஏஎன்ஐ

Updated On :8 மே 2026, 3:14 pm IST

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மீண்டும் சந்திக்கிறார்.

தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளது. விசிக, இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநரைச் சந்திக்கவிருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று, நேற்று முன்தினம் என இரு நாள்களும் ஆளுநரை விஜய் நேரில் செண்ரடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோருவாரா? அல்லது 118 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டாரா? என ஆளுநரின் சந்திப்பிற்குப் பின்னரே தெரிய வரும்.

Summary

TVK Leader Vijay meets tn governor again today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.