மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர்: காங்கிரஸ்
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு செய்தது.


மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவு செய்தது.
மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, செப்டம்பர் 14-இல் இந்தப் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற கொள்கை வகுப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர்கள் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் துணைத் தலைவர்கள், கொறடா-க்கள் ஆகியோரும் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் விவகாரத்தில், சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியது சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்துக்குப் பிறகு கடிதம் எழுதிய தலைவர்கள் சிலர் காங்கிரஸ் தலைமையை நேரடியாக சந்திப்பது இதுவே முதன்முறை.
மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து செயல்பட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால் விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...