கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டிற்காக ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டார்.

இதில் இன்று (வியாழக்கிழமை) கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும், தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார். இதில் பரஸ்பர ஆர்வம், இருநாட்டு உறவுகள், நட்புறவு மேம்பாடு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து சுட்டுரையில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளதாவது, ''கிரிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சிங்கிஸ் ஐதர்பெகோவ் உடனான சந்திப்பு இனிமையானதாக அமைந்தது. 

கரோனா பெருந்தொற்று சூழலில் இந்திய மாணவர்கள் நாடு திரும்புவதற்கு உதவிகரமாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்திய  ஒற்றுமை குறித்து விவாதம் நடைபெற்றது. அனைத்துத்துறைகளிலும் கூட்டு முயற்சி மேம்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று தஜிகிஸ்தான் அமைச்சருடனான சந்திப்பு குறித்தும் அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவட் பதிவிட்டுள்ளதாவது, ''தஜிகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹ்ரிதீன் உடனான சந்திப்பு சுமூகமாக அமைந்தது. இதில் இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் உள்ள வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com