பிகாரில் உரிய நேரத்தில் தேர்வு நடத்த வலியுறுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளும் மூடப்பட்டு மாநிலங்களில் உள்ள கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிகாரில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் பருவத்தேர்வை வைக்க வலியுறுத்தி இறுதியாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவிகள், உரிய நேரத்தில் தேர்வு வைக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகளையும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தேர்வு வைத்தால் மட்டுமே காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலும் என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

