ஆந்திரம், கர்நாடகத்தில் சமீப நாள்களில் கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 9,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,67,123 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 66 பேர் பலியானார்கள்.
இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4,912 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 95,072 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 10,131 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,67,139ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் இன்று மேலும் 9,894 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,59,445 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 104 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 7,265 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 8,402 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,52,958 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 99,203 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 807 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! எம்பிக்களின் கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


