செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரலாம் : ஹர்ஷ வர்தன்

​2021-ம் ஆண்டு முதல் காலாண்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :13 செப்டம்பர் 2020, 5:06 pm


2021-ம் ஆண்டு முதல் காலாண்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் தன்னைப் பின்தொடருபவர்களிடம் உரையாற்றிய ஹர்ஷ வர்தன் இதுபற்றி தெரிவித்ததாவது:

"கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தேதி நிர்ணயிக்கப்படவில்லை. 2021 முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு வரலாம். மனிதர்களுக்குப் பரிசோதனை செய்ய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. பெரும்பாலான மக்களுக்கு நோய்த் தடுப்பை சாத்தியப்படுத்துவது பற்றி கரோனா தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய வல்லுநர் குழு விரிவாக திட்டம் வகுத்து வருகிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, உற்பத்தி காலம் உள்ளிட்டவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்கள் மற்றும் கரோனா பாதிப்பு அதிகளவு இருக்கக் கூடிய அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்காக கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படுவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஒருமித்த முடிவு எட்டிய பிறகே, இது நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா தடுப்பூசி மீது யாருக்கேனும் நம்பிக்கையின்மை இருந்தால், முதல் நபராக நானே மகிழ்ச்சியுடன் செலுத்திக்கொள்வேன்." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.