செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா: இந்தியாவில் தினமும 70 ஆயிரம் பேர் குணமடைகின்றனர்

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து தினமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :13 செப்டம்பர் 2020, 3:59 pm

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து தினமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கவனமான, ஒன்றிணைந்த, துரிதமான மற்றும் திறன் வாய்ந்த நடவடிக்கைகளின் மூலம் அதிக அளவிலான பரிசோதனைகள், சிறப்பான கண்காணிப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை மூலம் இது சாத்தியமாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 78,399 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து 37,02,595ஐ தொட்டுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.88 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 58 சதவீத குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.

மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.