செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மிசோரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

மிசோரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

பாஜக சட்டமன்ற உறுப்பினர் புத்த தான் சக்மா

Updated On :13 செப்டம்பர் 2020, 12:18 pm

மிசோரத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் பிரமுகர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் மிசோரமில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான புத்த தான் சக்மாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொற்று உறுதிசெய்யப்பட்ட 35 பேரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புத்த தான் சக்மாவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 வயதான அவர், மிசோரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது ஆச்சரியமாக உள்ளது. நல்வாய்ப்பாக எனது குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

எனக்கு தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்தானது என்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்காக மருத்துவ இடம் ஒதுக்காததை கண்டித்து கடந்த 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இவர் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.