ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நீட் தேர்வு நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) நிறைவு பெற்றது. 

News image
​கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2020, 11:45 am

DIN

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு (நீட்) நிறைவு பெற்றது. 

நாடு முழுவதும் இன்று(செப். 13, ஞாயிற்றுக்கிழமை) 154 நகரங்களில் 3,842 மையங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தைப் பொருத்தவரை 14 நகரங்களில் 238 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. 

தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும் மொத்தமாக 15,97,433 போ் நீட் தோ்வினை எழுதினர். 

கரோனா பரவலினால் நீட் தோ்வு மையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 5 மணி வரை நடைபெற்றது. 

தேர்வு எளிமையாக இருந்ததாகவும், பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்டகப்பட்டதாகவும் தமிழக மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.