மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 311 காவலர்களுக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

Updated On :14 செப்டம்பர் 2020, 10:38 am


மகாராஷ்டிரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களும் தொடர்ச்சியாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 311 காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். 

இதுவரை மொத்தம் பாதிப்புக்குள்ளான காவலர்களின் எண்ணிக்கை 19,385 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15,521 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 194 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 3,670 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அங்கு கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மொத்தம் 34,734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 24,97,51,114 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.