நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆப்கனில் சாலையோர குண்டுவெடிப்பு: 5 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானின், மேற்கு பாட்கிஸ் மாகாணத்தின் அப்கமாரி மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது சாலையோர குண்டு வெடித்ததில் 5 ஆப்கானிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் நசீர் நசரி திங்களன்று தெர

News image

Roadside bomb kills 5 Afghan soldiers in Afghanistan

Updated On :14 செப்டம்பர் 2020, 10:57 am

ANI

ஆப்கானிஸ்தானின், மேற்கு பாட்கிஸ் மாகாணத்தின் அப்கமாரி மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது சாலையோர குண்டு வெடித்ததில் 5 ஆப்கானிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் நசீர் நசரி திங்களன்று தெரிவித்தார். 

தெஹிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் சாலையோர பகுதியில் புதைத்து வைத்த குண்டு ராணுவ வாகனம் செல்லும்போது வெடித்துள்ளது. இதில், வாகனத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சமீப காலங்களில் பொதுமக்கள் மீதான சாலையோர குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை தலிபான் இயக்கம் பொறுப்பேற்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.