முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னை ஐஐடி-ல் வேலை வேண்டுமா..? - பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி-ல் காலியாக உள்ள தரவுத்தள நிபுணர், தரவுத்தள நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

சென்னை ஐஐடி

கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 11:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி-ல் காலியாக உள்ள தரவுத்தள நிபுணர், தரவுத்தள நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர எண்.: ICSR/PR/Advt.40/2026

பணி: Database Specialist, Database Administrator

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 25,000 - ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி(கணினி அறிவியல்) அல்லது அதற்கு இணையான முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தரவுத்தள செயல்திறன், பாதுகாப்பு, தரவு காப்பகப்படுத்துதல் மற்றும் அளவு மேலாம்மை ஆகியவற்றில் 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icsrstaff.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.4.2026

Summary

ICSR Applications are invited from young and motivated candidates with desired qualification for the post of Database Specialist and Database Administrator

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.