பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தாணேவில் புதிதாக 1,793 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,739 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,47,847 ஆகக் உயர்ந்துள்ளது. 

News image

1,739 new COVID-19 cases in Thane, tally crosses 1.

Updated On :15 செப்டம்பர் 2020, 6:10 am

PTI

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,739 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,47,847 ஆகக் உயர்ந்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய கரோனா நிலவரப்படி..

கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,949 ஆக உயர்ந்துள்ளது.  

புதிய பாதிப்புகளில், கல்யாண் நகரத்திலிருந்து 500 பேரும், தாணே நகரத்திலிருந்து 403 பேரும், நவி மும்பையிலிருந்து 342 பேரும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள தொற்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன. இதுவரை, கல்யாண் - 35,735, நவி மும்பை - 31,005, தாணே நகரம் - 30,601 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. தாணேவில் மட்டும் இதுவரை 901 இறப்புகளும், அதனைத் தொடர்ந்து கல்யாண் -734 மற்றும் நவி மும்பை -665 ஆக பதிவாகியுள்ளன. 

தற்போது வரை, மாவட்டத்தில் 18,206 பேர் தொற்று பாதித்து மருத்துவமனையில் உள்ளனர். 1,25,686 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன என்று தாணே மாநகராட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் மாலவி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.