இந்தியாவில் அதிகரித்த புயல்களின் எண்ணிக்கை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டதாக மத்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான சராசரி அளவைக் காட்டிலும் அதிகம்.
1891 முதல் 2017 வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் மற்றும் அரபிக்கடலில் ஒரு புயலும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் எனும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாக இருந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
அரசுத் தரப்பு தகவலின்படி அரபிக் கடலில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டு ஒரு புயலும், 2018ஆம் ஆண்டு 3 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் வங்காள விரிகுடாவில் அதிதீவிரமான அளவில் 2017ஆம் ஆண்டில் 2 புயல்களும், 2018ஆம் ஆண்டில் 4 புயல்களும்,2019ஆம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...