ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தைகள் பலி: ஆலையில் சோதனை

வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட இரண்டுக் குழந்தைகள் பலியானதை அடுத்து, பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

News image
வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தைகள் பலி: ஆலையில் சோதனை
Updated On :19 செப்டம்பர் 2020, 11:14 am

DIN


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் புகழ்பெற்ற பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட இரண்டுக் குழந்தைகள் பலியானதை அடுத்து, பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமையன்று இந்த பிஸ்கெட் நிறுவனத்தின் க்ரீம் வேஃபர் பிஸ்கெட்டை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம் அடைந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஆய்வு நடத்திய உணவுத் துறை அதிகாரிகள், அங்கு பிஸ்கெட் தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருள்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து வந்தனர். குழந்தைகள் சாப்பிட்ட பிஸ்கெட்டின் மாதிரிகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. பிஸ்கெட் தயாரிப்பு ஆலையில் ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.