ஜம்மு: எல்லையில் ராணுவ வீரர் தற்கொலை?
ஜம்முவில் தலையில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


ஜம்முவில் தலையில் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ராணுவ வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு மாவட்டத்திலுள்ள ஜூரியன் பகுதியில் உள்ள முகாமில் பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரரான ஹவில்தார் ஹர்விந்தர் சிங் (36) என்பவர் தலையில் குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடற்கூறு ஆய்வுக்கு பிறகு விரிவான விசாரணை நடைபெறும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...