தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 153 காவலர்களுக்கு கரோனா: மேலும் 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 153 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 காவலர்கள் உயிரிழந்தனர்.

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 153 காவலர்களுக்கு கரோனா: மேலும் 5 பேர் பலி

Updated On :19 செப்டம்பர் 2020, 10:20 am

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 153 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5 காவலர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவு கரோனா பதிப்பு பதிவாகி வருகிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 153 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக கரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 217-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 20,954-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு 17,006 காவலர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், 3,731 காவலர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கரோனா ஊரடங்கில் 2,60,174 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். பொதுமுடக்கத்தை மீறியதாக 35,086 பேர் மீது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 25.33 கோடி ரூபாயை காவல்துறையினர் அபராதமாக வசூலித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.