25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில்  2 தீவிரவாதிகளை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் காவல்துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ரோந்துப் பணியின்போது வெவ்வேறு பகுதிகளில் 2 தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவந்திபோரா மாவட்டத்தில் ஒருவரையும், கரேவ் பகுதியில் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

பின்னர் அவர்களின் உடமையில் இருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.