புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 93 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் ஒரு நாள் பாதிப்பில் முந்த முடியாத உச்சத்தில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.
உலகளவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,345 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 39,991 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில், கரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 93,337 ஆக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 16-ம் தேதி இந்தியாவில் 97,894 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், 14-ம் தேதியை தவிர்த்து தொடர்ந்து 8 நாள்களாக கரோனா பாதிப்பு 92 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது.
முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் சுமார் 93 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவிலோ பாதிப்பு 51 ஆயிரமாக உள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பு பட்டியலில் விரைவில் இந்தியா முதல் இடத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 1,274 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,08,014 பேராக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 85,619 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


