தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

News image

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா

Updated On :20 செப்டம்பர் 2020, 5:52 am

தெலங்கானாவில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,137 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,71,306-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 30,573 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று  (சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் 53,811 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24,88,220 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் 0.60 சதவிகிதமாக உள்ளது. தேசிய அளவில் ஒப்பிடும்போது 1.60 சதவிகிதமாக உள்ளது.

தெலங்கானாவில் குணமடைவோர் விகிதம் 79.65 சதவிகிதமாக உள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.